2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

பஸ் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்படும்

Super User   / 2011 நவம்பர் 14 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

டீசல் விலை லீற்றருக்கு 8 ரூபாவினால் அண்மையில் அதிகரிக்கப்பட்டதையடுத்து, மீண்டும் பஸ் கட்டணங்களை இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாகவும் அதிகரிப்பதற்கான அமைச்சரவை அனுமதியை எதிர்பார்த்துள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து கொள்கையின்படி, டீசல் விலை 4 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே, பஸ் கட்ணடங்கள் அதிகரிக்கப்பட முடியும்.  இப்போது 3.5 சதவீதத்தால் மாத்திரமே டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்வதற்கான டீசல் விலை அதிகரிப்பு சதவீதத்தை 2 சதவீதமாக மாற்றி அதை அமைச்சரவையின் அனுமதிக்காக அனுப்பவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் விக்டர் சமரவீர கூறினார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று நள்ளிரவு முதல் நாடாளாவிய ரீதியில் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்போவதாக எச்சரித்திருந்தனர். எனினும், தனியார் போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றுடனான கலந்துரையாடலின் பின்னர் பஸ் கட்டணங்களை மிளாய்வு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

'எமக்கு தம்மால் மானியம் வழங்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் ஒரு மாதத்திற்குள் பஸ் கட்டணங்களை அதிகரிப்பதாக எழுத்துமூலம் உறுதியளிக்கப்பட்டுள்ளது என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கூறினார்.
இறுதியாக கடந்த ஜூலை முதலாம் திகதி பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .