2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை குத்தகைக்கு வழங்கப்பட்டது

Super User   / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு 30 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அரச நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சர் அன்டன் தயாசிறித திசேரா, தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு இன்று தெரிவித்தார்.

செயற்பாடு குறைந்த நிறுவனங்களை சுவீகரிப்பதற்கான சட்டம் தொடர்பாக சர்ச்சை நிலவும் நிலையில், தொழிற்சாலை அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றபின்னர்  சுயமாக ஓய்வுபெறும் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். எனினும் நிறுவனத்தின் 51 சதவீதமான பங்குகள்  இலங்கை அரசாங்கத்தின் வசம் இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மொத்த குத்தகைத் தொகையான 600 மில்லியன் ரூபாவில் 400 மில்லியன் ரூபாவை அந்நிறுவனம் ஏற்கெனவே வழங்கியுள்ளதாகவும் எஞ்சிய 200 மில்லியன் ரூபா பின்னர் வழங்கப்படு; எனவும் கூறினார்.

ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்காக 203 மில்லியன் ரூபாவை அந்நிறுவனம் ஒதுக்கியுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X