2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழு கலைக்கப்பட்டது

Super User   / 2011 நவம்பர் 16 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜயசுந்தர)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து அவ்வாணைக்குழு நேற்று செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 20 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என தற்போது இயங்காதுள்ள மேற்படி ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஷ்மன் விக்கிரமசிங்க கூறினார்.

ஆணைக்குழு தனது பணியை நிறைவுசெய்துள்ள போதிலும் அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் சிறிய ஊழியர் குழுவொன்று ஈடுபட்டள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய சுவடிக்கூடத்திற்கு இந்த அறிக்கையை கையளிப்பதற்காக இன்னும் இரு மாதங்களுக்கு இந்த ஊழியர்குழு செயற்படும் எனவும் அவர் கூறினார்.

இவ்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஜனாதிபதி தீர்மானிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .