Super User / 2011 நவம்பர் 16 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
அலரி மாளிகையிலிருந்து கணினி அச்சியந்திர பாகங்கள் மற்றும் எழுதுபொருட்களை திருடியதாக குற்றஞ்சுமத்தப்பட்ட, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரின் அலுவலகத்தைச் சேர்ந்த இரு ஊழியர்களை நவம்பர் 30 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
இச்சந்தேக நபர்கள் பொருட்களை திருடுவதற்காக கோரிக்கைப் படிவங்களில், அலுவலகத்திற்குத் தேவைப்படும் பொருட்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ததாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்ட பொருட்கள் கொழும்பு லோட்டஸ் வீதியிலுள்ள வர்த்தகவர் ருவருக்கு விற்கப்பட்டதாகவும் பொதுச்சொத்து சட்டத்தின்கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் எனவும் சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
மேற்படி வர்த்தகர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago