2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

தாய்லாந்துக்கு இலங்கை நிவாரண பொருட்கள்

Super User   / 2011 நவம்பர் 21 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாய்லாந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை 50,000 அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி பொருட்களை இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது.

குறித்த உதவி பொருட்களை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் றுங்னாபா ஸ்ரீவனாவித்திடம் கையளித்தார்.

சுமார் 100,000 குடிநீர் போத்தல்களும் 150 தண்ணீர் தாங்கிகளுமுள்ள இந்த உதவி பொருட்கள் பங்கொக்கிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் ஊடாக கையளிக்கப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சும் இலங்கை தேயிலை சபையும் இணைந்து 1,300 கிலோ கிராம் தேயிலையை தாய்லாந்து அனுப்ப ஏற்பாடு செய்துள்ளன.

இது இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் நன்கொடை மூலம் திரட்டப்பட்டது. இலங்கை வர்த்தக சம்மளேனம், தேசிய வர்த்தக சம்மேளனம் என்பனவும் மேற்படி உதவி பொருட்களுக்கு பங்களிப்பு செய்துள்ளன.

தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு என்பவற்றிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டது. அத்துடன் சுமார் 600 பேர் உயிரிழந்ததுடன் 5 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X