Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 21 , பி.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ். செல்வநாயகம்)
நகரம் மற்றும் நாடு திட்டமிடல் (திருத்தம்) எனும் சட்டமூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தின் கீழ் வரும் விடயங்கள் தொடர்பில் சட்டமியற்றுவதாக உள்ளது என உயர் நீதிமன்றதில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கொன்றில் மனுதாரரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதா என தீர்மானிக்கும்படி உயர்நீதிமன்றத்தை கோரும் இம்மனுவில் மனுதாரரான மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து சட்டமா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் நிரான் ஆன்க்டெல் மற்றும் ஜெருஷா குரொசெட் தம்பையா ஆகியோருடன் எம்.ஏ.சுமந்திரன் ஆஜரானார்.
நவம்பர் 24 ஆம் திகதிக்குமுன் இரண்டு தரப்பினரும் தமது ஆட்சேபணைகளை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிமன்றம் பணித்தது.
'உட்கட்டுமானம், வேறு தேவைகள் தொடர்பில் அமைச்சர் தேவையென கருதுமிடத்து நிலத்தை பாதுகாக்கப்பட்ட பகுதி, பேணப்படும் பகுதி, தொல்பொருள் -வரலாற்று பகுதி புனிதப் பிரதேசம் என பிரகடனப்படுத்த அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதாக உள்ள இந்த சட்டமூலம் அரசியலமைப்பில் பட்டியல் 01 (மாகாண சபைக்;குரிய பட்டியல்) இல் குறிப்பிடப்பட்டுள்ள 18 ஆவது விடயத்தில் அமைச்சர் தலையிட அதிகாரம் வழங்குவதாக உள்ளது.
இச்சட்டமூலம் எந்தவொரு மாகாண சபையின் பரிசீலனைக்கும் அனுப்பப்படவில்லை. எனவே இதை சட்டமாக்க முடியாது என மனுதாரர் கூறியுள்ளார்.
எனவே இது அரசியலமைப்புக்கு முரணான சட்டமூலம் என அறிவிக்கும்படி மனுதாரர் உயர் நீதிமன்றத்தை தனது மனுமூலம் கோரியுள்ளார்.
31 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
4 hours ago