Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 22 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளைக் கொடியுடன் வந்தவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று முன்வைக்கப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட கலங்கம் இன்னமும் மாறவில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, 'வெள்ளைக் கொடி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட நிலையிலேயே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அன்று பொதுமக்களின் பின்னால் மறைந்திருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் இராணுவத்தினர் மீதும் அரசாங்கத்தின் மீதும் தாக்குதல்களை நடத்தினர். இன்று அவர்கள் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னால் நின்றுகொண்டு நிதி சேகரிப்புக்களில் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
41 minute ago
57 minute ago
1 hours ago