2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

நாணய மதிப்பிறக்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் வரவேற்பு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 23 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை நாணயம் மதிப்பிறக்கம் செய்தமையை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.  இந்த நடவடிக்கை இலங்கை ஏற்றுமதிப் பொருட்களின் போட்டியாற்றலை பேணவும் அதன் வெளிநாட்டு ஒதுக்கத்தை பாதுகாத்துக்கொள்ளவும் சாதகமாக அமைகிறதென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது இலங்கை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ  ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் நாட்டின் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும் மூன்று சதவீத நாணயப் பெறுமதி இறக்கத்தை அறிவித்திருந்தார். (Reuters)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X