Janu / 2026 மார்ச் 04 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை பேருந்து நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து, வெட்டுக்காயங்களுடன் கூடிய நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இரவு 7.30 மணியளவில் 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் குழுவினர் சோதனையிட்டபோது, முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் இந்த சடலம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடலில் கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளதால், இவர் வேறொரு இடத்தில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, பின்னர் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் மொரட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த "சுரா" என அழைக்கப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் எனவும், இது தொடர்பான வழக்கு மொரட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

14 minute ago
25 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
43 minute ago