2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

சரத் என் சில்வாவுக்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக் குழு குறித்து சட்டத்தரணிகள் விசனம்

Super User   / 2011 நவம்பர் 23 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(லக்மால் சூரியகொட, ஆயிஷா ஸுஹைர்)

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிரான விசாரணைக்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதை வாபஸ் பெறுமாறு பிரபல சட்டத்தரணிகள் பலர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான மனுவொன்றில் குறைந்தபட்சம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த 153 அங்கத்தவர்கள் கையெழுத்திட்டுள்ளதாக சட்டத்தரணி நிமல் வீரகொடி டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.

சிரேஷ்ட குற்றவியல்  சட்டத்தரணி திரந்த வலிலியத்த இப்பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

இலங்கை ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி பதவியிலுள்ள நீதிபதிக்கு எதிராக விசாரணை நடத்தமுடியும் எனவும் ஓய்வுபெற்ற நீதிபதியொருவரை விசாரிப்பதற்கு அனுமதி இல்லை எனவும் இம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விசாரணை தொடர்பாக எதிர்ப்பையும் கவலையையும் விசனத்தையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக சங்கத்தின் விசேட பொதுக்கூட்டத்தை கூட்டுமாறும் இச்சங்கத்தின் தலைவர் ஷிப்லி அஸீஸை மேற்படி சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.


  Comments - 0

 • meenavan Thursday, 24 November 2011 04:53 AM

  ஜனாதிபதி இவ்விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்வாரோ?

  Reply : 0       0

  pasha Thursday, 24 November 2011 02:07 PM

  சரத் சில்வாவின் தீர்ப்புகள் தான் இவ்வரசு ஆட்சியில் அமரவவும் தன்னை பலப்படுத்தவும் பயன்பட்டன. இப்போது அவருக்கே உலை.

  Reply : 0       0

  sano Thursday, 24 November 2011 03:47 PM

  ஏன் அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? சட்டம் ஒழுங்கெல்லாம் எம்மை போன்றவர்களுக்குத்தான்.

  Reply : 0       0

  hassanqs Thursday, 24 November 2011 04:00 PM

  MUTHALIL சரத் FONSEKA நவ் சரத் N SILVA

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .