2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

3 லட்சத்திற்கு அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

Freelancer   / 2026 மார்ச் 06 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

லெபனானின் லிட்டானி ஆற்றுக்கு தெற்கே வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் கட்டளையிட்டுள்ளது.

அதனடிப்படையில், லெபனான் முழுவதும் 320 இற்கும் மேற்பட்ட இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் போது ஏவுகணை ஏவுதளங்கள் உள்ளிட்ட பல முக்கிய இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானில் இருந்து மக்கள் பாரிய அளவில் வெளியேறி வருகின்றமை மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .