Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 நவம்பர் 24 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
யுத்த காலத்தில் இறந்தவர்கள் மற்றும் காணமல் போனவர்கள் தொடர்பில் சனத்தொகை மதிப்பீடு இடம்பெறுவதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சர்வதேச உறவுகள் மற்றும் தந்திரோபாய கற்கைகளுக்கான லக்ஷமன் கதிர்காமர் நிலையத்தினால் 'நல்லிணக்கம்: யுத்தத்திற்கு பின்னரான இலங்கையை முன்னேற்றுவதற்கு வழி' எனும் தலைப்பிலான மாநாடு குறித்த நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் யுத்தத்திலிருந்து நல்லிணக்கம் எனும் தலைப்பில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சனத்தொகை மதிப்பீட்டு திணைக்களத்தினால் 30 வருடங்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் சனத்தொகை கணிப்பீடிலேயே இது கணிக்கப்படுகின்றது.
இதன்போது, இயற்கை காரணங்கள், விபத்து, சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியவர்கள், விடுதலை புலிகளுடனான யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்கள், விடுதலை புலிகளினால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள் என பல்வேறு வகையாக கொல்லப்பட்டவர்கள் பிரிக்கப்படுவர்.
இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள் மிகச் சிறிய ஒரு தொகையினரேயாகும். இது தொடர்பில் தகுந்த ஆதாரங்களுடன் குற்றங்கள் சமர்ப்பிக்கப்படுமாயின், இராணுவம் அதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
யுத்திற்கு பின்னரான சூழ்நிலையில் 3,173 குடும்பங்கள் மாத்திரமே இன்னும் மீளக்குடியேற்றப்படவுள்ளனர். இவர்கள் அனைவரும் மிக விரைவில் குடியமர்தப்படுவார்கள்.
சுமார் 100,000 மேற்பட்ட உள்நாட்டில் ,டம்பெயர்ந்தவர்களை மிக விரைவாக மீள்குடியேற்றியுள்ளோம். சுமார் 11,000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இவர்களில் 700 பேரை இன்னும் விடுதலை செய்ய வேண்டியுள்ளது. ,வர்கள் அனைவரும் இந்த வருட இறுதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள்.
முன்னர் இருந்த அரசாங்கள் இந்த கொடிய யுத்ததினை தங்களது சொந்த அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தினர். இதனால் சுமார் 7 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் சுமார் இரண்டு அரச தலைவர்கள், 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
எமது இராணுவத்திற்கு மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்டம் போன்ற பல்வேறு விடயங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார். Pix By:Kithsri De Mel
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
52 minute ago
02 Jul 2025