2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

பலத்த காற்று குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்படாதது ஏன்? முழுமையாக விசாரிக்கப்படும் என்கிறது அரசு

Super User   / 2011 நவம்பர் 26 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் தென்பகுதியில் இவ்வாரம் இடம்பெற்றபலத்த காற்றின் அழிவுகள் குறித்து இலங்கை காலநிலை அவதான நிலையம் முன்னெச்சரிக்கை விடுக்கத் தவறியமை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும் என  அரசாங்கம் அறிவித்துள்ளது.

இக்காற்றினால் 19 பேர் பலியானதுடன் 33 பேர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. பலத்த காற்று குறித்த இந்தியாவின் முன்னெச்சரிக்கைகள்  புறக்கணிக்கப்பட்டதாக  தகவல்கள்  வெளியான நிலையில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாத்தறையில் வைத்து, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர செய்தியாளர்களிடம் பேசுகையில், காலநிலை அவதான நிலையத்தின் செயற்பாடுகளில் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றனவா என்பது குறிது விசாரிப்பதற்கு விசேட குழு நியமிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கடந்த வியாழன், வெள்ளி தினங்களில் காலி, மாத்தறை மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினால் 9000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

இக்காற்றினால் ஏற்பட்ட மரணங்களுக்கு யாராவது பொறுப்பு கூறவேண்டும். எந்த அரச நிறுவனத்திடமிருந்தும் எமக்கு முன்னெச்சரிக்கை கிடைக்கவில்லை. இதன் விளைவாக டஸன் கணக்கான மீனவர்கள் தமது உயிர்களையும் குடும்பங்களையும், ஜீவனோபாயத்தையும் இழந்துள்ளனர்' என மாத்தறை பலநாள் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மஞ்சுள பியசாந்த கூறினார்.

இதேவேளை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகள் இருளில்மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மின்விநியோகத்தை முழுமையாக சீராக்குவதற்கு குறைந்தபட்சம் மேலும் 3 நாட்கள் செல்லும் என அதிகாரியொருவர் கூறினார்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை  புதைப்பதற்கான நடவடிக்கைகளை பிரதேசவாசிகள் மேற்கொண்டுள்ள நிலையில் கடலில் காணாமல் போனவர்கள் திரும்பிவர வேண்டும் என சிலர் கடற்கரைகளில் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0

 • Azkimaya Monday, 28 November 2011 04:10 PM

  தகுதியானவர்கள் பதவில இல்லை.

  Reply : 0       0

  meenavan Sunday, 27 November 2011 12:04 PM

  முன் எச்சரிக்கை விடுக்கப்படாமைக்கு, வானிலை அவதான அரச ஊழியர்கள் குற்றம் காணப்பட்டு தண்டிக்கப்படலாம்? அரசாங்கம் செய்யும் தவறுகளுக்கு யாரை தண்டிப்பது? குறைந்தது அந்த நிறுவனம் எந்த அமைச்சின் நிர்வகிப்பின் கீழ் வருகிறதோ அவ் அமைச்சர் இராஜினாமா செய்வாரா?

  Reply : 0       0

  nanpan, add Sunday, 27 November 2011 06:38 PM

  முன்னெச்சரிக்கை செய்தால் மட்டும் என்ன செய்யப்போகிறீர்கள். வானதுக்குக்கீழ் வீடு கட்டினால் அனைத்தையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

  Reply : 0       0

  Akkaraipattu Monday, 28 November 2011 03:24 AM

  is there any Qualified employees .......?????

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .