Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 நவம்பர் 28 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாருக் தாஜுதீன்)
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தினத்தின்போது முல்லேரியா துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து, துமிந்த சில்வா சிகிச்சை பெற்றுவந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நோய் நிர்ணய –சிகிச்சை விபர அட்டையின் அத்தாட்சிப்படுத்திய பிரதியை வழங்குவது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படுமென கொழும்பு நீதவான் அறிவித்தார்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, நோய் நிர்ணய – சிகிச்சை விபர அட்டை என்பவற்றை பார்வையிட விரும்புவதாக துமிந்த சில்வாவின் சார்பில் ஆஜரான சட்டதரணி வர்ணகுலசூரிய நீதிமன்றில் கூறினார்.
இதனை ஆட்சேபித்த வழக்குரைஞரான ஜனாதிபதி சட்டத்தரணியான வலலியத்த, விசாரணை முடியுமுன் நோய் நிர்ணய சிகிச்சை விபர அட்டை வழங்கப்படின் சாட்சியம், விசாரணை என்பவற்றில் தலையிட வாய்ப்பு உண்டு என கூறினார்.
குற்றப்புலனாய்வு பொலிஸ் நீதிமன்றில் சமர்பித்துள்ள அட்டையை பதிவாளரின் பாதுகாப்பில் வைக்க வேண்டுமெனவும், இந்த வழக்கை ட்ரயல் அற்பார் முறையில் விசாரிக்க வேண்டுமெனவும் நீதிமன்றத்தை அவர் கோரினார்.
இந்நிலையில் இது குறித்து இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.
25 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
avathaani Tuesday, 29 November 2011 02:46 PM
ட்ரயல் அட்பார் முறை விசாரைனை என்னும் போது வழக்கு விசாரணை மிகவும் விறு விருப்பு நிலைக்கு செல்லுவது அரசினை இக்கட்டான நிலைக்கு தள்ளுமோ? மனித உயிர்கள் காவு கொள்ளபட்ட நிலைமையில் நீதி நிச்சயம் நிலை நாட்டப்படவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago