2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'சிங்கராஜ வீதி அபிவிருத்தி நிறுத்தப்பட வேண்டும்'

Super User   / 2011 நவம்பர் 30 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிங்கராஜ வனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதெனக் கூறப்படும், இலும்பகந்த முதல் சூரியகந்த வரையிலான சர்ச்சைக்குரிய வீதி அமைப்பு நிர்மாணப் பணிகளை நிறுத்த வேண்டும் என இது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட 12 பேர் கொண்ட குழு சிபாரிசு செய்துள்ளது.

பேராதனை பல்லைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிமல் குணதிலக்க தலைமையிலான இக்குழு தனது அறிக்கையை சுற்றடாடல் அதிகார சபையின் தலைவர் சரித ஹேரத்திடம் கையளித்துள்ளது.

இப்பகுதியின் சூழல் முக்கியத்துவத்துவம் மற்றும் உலக மரபுரிமை பகுதிகளில் ஒன்றான சிங்கராஜ வனத்துக்கு சூழலியல் ரீதியில் நெருக்கத்தின் அடிப்படையில் இவ்வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென மேற்படி குழு சிபாரிசுசெய்துள்ளது. (சந்துன் ஜயசேகர)                                                                                                       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .