Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனில் இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது.
30 வயதான இவர் கடையொன்றில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரின் கழுத்துப் பகுதியில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் இவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லையெனக் கூறிய பொலிஸார், திறந்த மனதுடன் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினர்.
சுமார் 12 மாதங்களாக பிரிட்டனில் வசித்து வரும் இந்த இளைஞரின் இலங்கையிலுள்ள குடும்பத்தினரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை குடும்பத்தினருக்கு சொந்தமான கடையொன்றில் குறித்த இளைஞர் பணியாற்றி வந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படும் சந்தே நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். (Mirror.co.uk)
1 hours ago
9 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago
14 Jan 2026