2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்து வருகிறது: நீதிபதி வராவெவ

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 09 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹபீல் பாரிஸ்)

நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி டபிள்யூ.ரீ.எம்.பி.பீ.வராவெவ, தங்போதைய நிலைமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இன்று நீதித்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை நினைக்க கவலையாக உள்ளது. நீதித்துறையைச் சார்ந்தவர்கள் அச்சுறுத்தல் மற்றும் பயமின்றி சுதந்திரமாகச் செயற்பட வேண்டும்.

நீதித்துறை மீது அதிருப்திகொண்டு அதன் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஒவ்வொரு குடிமகனும் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .