2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

நாமல் எம்.பி.யை போன்று நடித்த இராணுவ வீரர் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரொருவரை விடுவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ போன்று நடித்து பொலிஸாருடன்  தொலைபேசியில் உரையாடிய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை, யட்டவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்,யட்டவத்தை பொலிஸுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி  தான் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்றும் யட்டவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழைப்பு தொடர்பில் சந்தேகம் கொண்ட யட்டவத்தை பொலிஸார் மேற்கொண்ட  விசாரணைகளின் போதே குறித்த இராணுவ வீரரை கைது செய்ததாக தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .