2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

கைதிகளின் சடலங்களை அடையாளம் காண நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 10 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலைக் கலவரத்தில் உயிரிழந்த சிறைக் கைதிகளின் சடலங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக கைதிகளின் உறவினர்கள் வைத்தியசாலை வளாகத்தில் அணிதிரண்டுள்ளதாகவும், உயிரிழந்த கைதிகளின் சுமார் 16 சடலங்கள் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இதேவேளை, சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடத்தப்பட்டதன் பின்னர் அவற்றை பிரேத பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .