2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

நன்மையை பெற பிரார்த்திப்போம்: ஜனாதிபதி

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

தீபத்திருநாளாம் தீபாவளித் திருநாள். இந்துப் பாரம்பரியத்தில் ஆன்மீக சுபீட்சத்தின் ஒரு வெளிப்பாடு என்றவகையில் விசேட முக்கியத்துவம் பெறுகிறது. தீயவற்றை நீக்கி, நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடமையையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றிகொள்வதை அது குறித்து நிற்கின்றது அதற்காக பிரார்த்திப்போம் என்று ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீகப்பெறுமானங்கள், பாரம்பரியங்களுக்கேற்ப சிறந்த வாழ்க்கைக்காக மக்கள் மேற்கொண்ட ஒரு உறுதியான போராட்டத்தின் முன்னேற்றத்தை அது அடையாளப்படுத்தி நிற்கின்றது.

இலங்கை வாழ் இந்துக்கள் இன்று இவ்விசேடப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக உலகெங்கிலுமுள்ள தமது சகோதர இந்துக்களுடன் இணைந்துகொள்கின்றனர். இது மக்களை பிரித்துவைக்கும் எல்லா வேறுபாடுகளையும் களைந்து அவர்கள் மத்தியில் சுபீட்சத்தை ஏற்படுத்துகிறது.

இத்தீபத்திருநாள் கொண்டாட்டம் இந்து சமயப் போதனைகளை போற்றிப் பின்றபற்றும் எல்லோர் மத்தியிலும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்து, அமைதி, சமாதானம் குறித்த எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றி வைக்கட்டும். இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரபா கணேசன் எம்.பி.யின் வாழ்த்துச் செய்தி


இன்றைய தீபாவளி திருநாளில் தமக்குரிய விடிவினை பெற்றுக்கொள்ள முடியுமா என்ற எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'இன்றைய காலகட்டத்தில் நாட்டில் வாழும் தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி தமிழ் அரசியல் தலைவர்களும் குழம்பி நிற்கின்றனர். ஸ்தம்பிதம் அடைந்துள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்விதம் அமையப்போகின்றது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றோம்.

13ஆவது சரத்து ஒழிக்கப்பட்டுவிடுமா அதன் பின்பு வரப்போவதாக பயமுறித்துக் கொண்டிருக்கும் 19ஆது சரத்தின் மூலமாக இருப்பதை இழந்து விடுவோமா அல்லது சர்வதேச தலையீட்டின் மூலமாக 19இல் அதிகளவு அதிகாரப் பகிர்வைப் பெற்று விடுவோமா என்று புரியாத நிலையில் இன்றைய தீபாவளி தினத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

எது எப்படி இருப்பினும் நரகாசூரனை ஒழித்து விடுதலையைப் பெற்றுக் கொண்டதை கொண்டாடும் இத்தீபாவளி திருநாளையும் தமிழ் மக்கள் பல எதிர்ப்பார்ப்புடன் கொணடாடுகிறார்கள். நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்க்கும் எமது மக்களின் எண்ணத்தை இத்தீபாவளி திருநாள் நிறைவேற்றி வைக்கும் என்ற நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்வோம். எண்ணங்கள் புணிதமானால் எதிர்ப்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .