2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

இந்திய கைதியின் கண் பாதிப்பு: காந்தா

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் போது அங்கு இந்திய கைதியொருவரின் கண் பாதிக்கப்பட்டுள்ளது. இவரைத் தவிர இந்தியக் கைதிகள் 38பேருக்கும் மோதலினால் எவ்வித பாதிப்பும் இல்லை“ என இலங்கைக்கான இந்தியத் உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள இந்திய சிறைக்கைதிகளை இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். குறித்த சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலவரத்தை அடுத்தே அதிகாரிகள் அவர்களைப் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறையிலுள்ள 39 இந்தியக் கைதிகளும் எவ்வித பாதிப்பும் இன்றி இருப்பதாக அவர்களைப் பார்வையிட்டுத் திரும்பிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 
'நாம் சகல இந்தியக் கைதிகளையும் சந்தித்தோம். ஒருவர் கண் உறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர 38 கைதிகளும் மோதலினால் எவ்வித பாதிப்பும் இன்றி உள்ளனர்' என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா 'த ஹிந்து' பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

கைதிகள், மோதலின் பொது தமக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை இந்திய அதிகாரிகளுக்கு விபரித்தனர். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கைதிகளும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் ஐந்து பேரும் வெவ்வேறு இடங்களில் இருந்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .