2021 ஜனவரி 16, சனிக்கிழமை

தப்பியோடிய கைதிகள் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 13 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலவரத்தின்போது தப்பியோடிய சிறைக்கைதிகளின் எண்ணிக்கை பற்றி முரண்பாடான செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த எண்ணிக்கை 20இலும் அதிகமாக இருக்குமென சிலர் கூறுகின்றனர்.

பொரளை மற்றும் தெமட்டகொட பகுதியில் நடந்த தேடுதலின் போது 9பேர் படிபட்டதாக அல்லது சரணடைந்ததாக கூறப்பட்டுள்ளது.  இதேவேளை, கலவரம் தொடங்கிய எல் மண்டபத்தில் கடமையிலிருந்த இரண்டு சிறைக் காவலர்கள், வேலை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

தப்பியோடியவர்களின் தொகை மூன்று தொடக்கம் 5 வரையானது என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரணியொன்று இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

வெலிக்கடை சிறைத் தொகுதியினுள் சட்டம், ஒழுங்கு என்பவற்றை நிலைநாட்டுவதற்காக பெருமளவிலான விசேட அதிரடிப்படையும் இராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .