2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மகளுக்கு மது பருக்கிய பெற்றோர் கைது

Kanagaraj   / 2012 நவம்பர் 14 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாங்களும் மதுவை அருந்திவிட்டு போதை தலைக்கேறியதன் பின்னர் தங்களுடைய ஒரேயொரு மகளுக்கும் மதுவை பருக்கிய பெற்றோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற குறித்த சிறுமியின் தந்தை தனது மனைவியுன்  இணைந்து மது அருந்தியுள்ளார்.

இளம் தம்பதியினரான அவ்விருவரும் மது அருந்திவிட்டு போதை தலைக்கேறியதை தொடர்ந்து தங்களுடைய ஒரேயொரு மகளான ஒன்பது வயது  மகளுக்கும் மதுவை பலவந்தமாக  பருக்கியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மத்துகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பெற்றோரை கைது செய்த பொலிஸார் அவ்விருவரையும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தினர்.

பெற்றோரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் தமிந்த ராமநாயக்க வெலிகொடபிட்டிய ஒன்பது வயது சிறுமியை சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறு பணித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .