2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

அநாகரிகமாக நடந்துகொண்ட ஆண்கள் இருவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 16 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட ஆண்கள் இருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தலா 1500 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

40 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட இருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர், அரச நிறுவனமொன்றில் கடமையாற்றுபவர் என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை இவ்விருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .