Editorial / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், பெண் மருத்துவர் ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்லேகலை தும்பறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, சிறைச்சாலை மருத்துவமனைக்கு பெண் மருத்துவர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது, அவரைப் பரிசோதனை செய்துகொண்டிருந்த வேளையில், குறித்த கைதி திடீரென மருத்துவரைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
சம்பவம் நடந்த உடனே அங்கிருந்த சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாகச் செயற்பட்டு கைதியைக் கட்டுப்படுத்தினர். இதனால் பெண் மருத்துவர் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வித்யா கொலை வழக்கில் 'குரூப் ரேப்' குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவரே இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026