2021 ஜனவரி 27, புதன்கிழமை

கொஹில கிழங்கு கறியால் சபையில் சர்ச்சை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளில் கொஹில கிழங்கு கறி சிகப்பாக இருந்தமையால் அதில் ஆசனிக் அமிலம் கலந்திருக்கலாம் என செய்திகள் வெளியானதையடுத்து சபையில் இன்று சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று தயாரிக்கப்பட்டிருந்த கொஹில கிழங்கு, பருப்பு கறிகளில்  ஆசனிக் அமிலம் கலந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், அவ்விரு கறிகளும் உறுப்பினர்களுக்கு பகிரிந்தளிக்காமல் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று கருத்துரைத்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, 'கறிகளில் ஆசனிக் அமிலம் கலந்திருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பில் உடனடியாக தெரிவிக்க முடியாது. எனினும் சமைத்த பின்னரே கறிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

இந்த நடைமுறையை மாற்றி சமைப்பதற்கு முன்னர் மரக்கறிகளை பரிசீலிக்குமாறு உத்தரவிடுகிறேன். ஆதலால், ஆசனிக் அமிலம் தொடர்பில் உறுப்பினர்கள் அச்சமடையத் தேவையில்லை. அதேபோல, விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன் உண்மைநிலை தெரியும்' என்றார்.

  Comments - 0

  • rima Saturday, 17 November 2012 07:19 PM

    நாடாளுமன்றத்தில் உள்ள ஏழை மக்களின் துரோகிகளுக்கு கொழுப்பு ஆதிகம் (அட்டைய தூக்கி மெத்தயில் வைத்தால் இதுதான்.)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .