2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சந்தேக நபர் காயத்துடன் கைது; துப்பாக்கியும் மீட்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரியும் தலைமை இன்ஸ்பெக்டருமான இந்திரசோமா ரத்நாயக்க சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணி தொடர்பில் நீண்டநாள் இடம்பெற்ற கருத்து முரண்பாடே இந்த சம்பவத்திற்கு பிரதான காரணம் என  பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் வங்கி ஒன்றில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற ஒருவர் என்று தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.

  Comments - 0

  • meenavan Sunday, 18 November 2012 09:42 AM

    ஓய்வு பெற்றாலும் மண் ஆசை யாரைத்தான் விட்டு வைக்கும்....ஆறடி நிலத்தை இறுதி இடமாக கொள்ளவேண்டிய மனிதம் மறந்து விட்டது மானுட பிறப்பின் மகத்துவம்.....?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .