2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

'பிள்ளைக்காக' போலி கையெழுத்திட்டவருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாரூக் தாஜுதீன்)

கல்வி அமைச்சின் செயலாளரினது கையெழுத்தை இட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சந்தேகநபரின் பிள்ளையை றோயல் கல்லூரியில் சேர்க்கும்படி கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொள்ளும் வகையில் கடிதமொன்றை எழுதி அதனை குறித்த நபர் பாடசாலையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த கடிதம் தொடர்பில் சந்தேகம்கொண்ட அதிபர், கறுவாத்தோட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில், இந்த கடிதத்தை மற்றுமொரு நபர் தன்னிடம் தந்ததாகக் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .