2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ரஷ்ய கைதிகளை தூதரக அதிகாரிகள் சந்திப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடன் அட்டை மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இலங்கையில் கைதுசெய்யப்பட்ட 5 ரஷ்யப் பிரஜைகளையும் ரஷ்ய தூதரகப் பிரதிநிதிகள் நேற்று திங்கட்கிழமை சந்தித்துள்ளனர். இதன்போது இவர்கள் ரஷ்யப் பிரஜைகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

250 போலிக் கடன் அட்டைகளுடன் இந்த 5 ரஷ்யப் பிரஜைகளும் கொழும்பில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இந்த விடயம் தொடர்பில் இலங்கை அதிகாரிகளிடமிருந்து எந்தவித உத்தியோகபூர்வ தகவல்களும் கிடைக்கவில்லை என ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த 5 ரஷ்யப் பிரஜைகளும் கம்போடியா மற்றும் வியட்னாமைச் சேர்ந்த பங்காளிகளுடன் இணைந்து இலங்கையிலுள்ள தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் ஒன்றிலிருந்து பெற்ற 25,000 அமெரிக்க டொலருடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் நிலைமை தொடர்பில் இந்த சந்தேக நபர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது. (ஆர்.ஐ.ஏ. நொவொஸ்டி)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .