2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

படிவுகளை ஆராயும் அடுத்த கட்டம் பெப்ரவரியில் ஆரம்பமாகும்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

எண்ணெய் மற்றும் இயற்கை வாயு படிவுகளை ஆராயும் வேலைத்திட்டத்தின்  அடுத்த கட்டம் 2013 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பமாகும் என பெற்றோலிய வள துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

மன்னார் படுகையில் இயற்கை வாயு படிவுகளை தேடி மூன்று கிணறுகள் கெயன் இன்ரநஷனல் நிறுவனத்தால் தோண்டப்பட்டது என அமைச்சர் கூறினார்.

இவற்றில் இரண்டில் இயற்கை வாயு படிவு இருப்பதற்கான தடயங்கள் உள்ளன. இந்த வாயுவை வெளிக்கொணர்வது வர்த்தக ரீதியில் இலாபம் தருவதாக அமையுமா? என்பது இப்போது ஆராயப்படுகின்றது. கெயன் இன்ரநஷனல் நிறுவனம் இதுவரையில் 131 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கை எண்ணெய் ஆய்வுக்காக செலவளித்துள்ளது என அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்துக்கு அப்பாலுள்ள கவேரிப்படுகையிலுள்ள கடலிலும் தென்கிழக்கு மாகாணத்துக்கு அப்பாலுள்ள கடலிலும் விரைவில் எண்ணெய் ஆய்வு தொடங்கும் என அமைச்சர் கூறினார்.

வர்த்தக ரீதியில் எடுக்கும் அளவுக்கு வாயுப்படிவு காணப்படினும் அதை எடுப்பதற்கு மூன்று தொடக்கம் ஐந்து வருடங்கள் எடுக்கும் என அமைச்சர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .