2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கார் பந்தய ஊக்குவிப்புக்கு கரு கண்டனம்

Super User   / 2012 நவம்பர் 21 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஒலிந்தி ஜயசுந்தர)

மக்கள் வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாமல் அவலப்படும் வேளையில் ஆடம்பர லம்போகினி கார் ஓட்டப் போட்டிகளை அரசாங்கம் ஊக்குவிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசுரிய குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் களவுகள், கொலைகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. சமூகத்தின் ஒரு பிரிவினர் சீவியத்தை கொண்டுபோக திண்டாடிக் கொண்டிருக்கும் போது, மேட்டுக்குடியினர் லம்போகினி கார் பந்தய காரர்களும் நாட்டில் இருக்கின்றனர்.

கொழும்பிலும் கண்டியிலும் கார் பந்தயத்துக்கு தம்மை தயாராக்கி கொண்டுள்ளனர். இவர்கள் மண் மூடைகளை போட்டு வீதிகளை மூடிவிடுகின்றனர். இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது .

மகாநாயக்கர்கள் இரவு நேர கார் ஓட்ட பந்தயங்களை கண்டித்தும் அதிகாரிகள் அதை அலட்சியம் செய்துள்ளனர். அதிகார மமதை தலைக்கேறியவர்கள் மக்களை கேவலமாக பார்க்கின்றனர்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .