2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

Kanagaraj   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாரூக் தாஜுடீன்)

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான வியஜதாஸ ராஜபக்ஷவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட நிறைவேற்றுக்குழுக்கூட்டம் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது. இதன்போதே நாவலயிலுள்ள விஜயதாச ராஜபக்ஷவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமன்றி நீதிமன்ற நடவக்கைகள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான அச்சுறுத்தல்களை எதிராக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் சுயாதீன நீதிமன்றத்தை பாதுகாப்பது குறித்தும் விரிவாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .