2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசாரணைக்குச் சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று சிறிபுர, முதுன்கம கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர் என்று கூறப்படும் மேற்படி சந்தேகநபர், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ள சந்தேகநபர், பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .