2021 ஜனவரி 27, புதன்கிழமை

வினாத்தாள் மோசடி; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை விஞ்ஞான வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உட்பட ஐந்து பேரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார்.

இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் ஒருவரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

2012ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியாகிவிட்டது என்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையிலேயே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கிணங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்விகளில் 18 கேள்விகளும் படங்களும், விடைகளும் பரீட்சையின் போது வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்விகளும், பதில்களும், படங்களும் ஒரேமாதிரியாக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததை அடுத்தே இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை கடந்த 15ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு முன்னர் கம்பஹா பிரதேசத்திலேயே இந்த மாதிரி வினாத்தாள் தொடர்பில் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. (படங்கள் - பிரதீப் தில்ருக்ஷன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .