2021 ஜனவரி 16, சனிக்கிழமை

நடிகர் செல்வசேகரனின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை பொறளையில்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று காலமாகிய இலங்கையின் புகழ்பெற்ற மூத்த கலைஞர் உபாலி செல்வகேகரனின் இறுதித் கிரியைகள் பொறளை பொது மயானத்தில் நாளை மாலை 4 மணிக்கு  நடைபெறுமென அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

மேடை, தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் மற்றும் தமிழ், சிங்கள திரைப்படங்கள் என்பவற்றினூடாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் குடிகொண்ட மூத்த கலைஞர் “உபாலி” செல்வசேகரன். நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனது 64ஆவது வயதில் உயிர் நீத்தார்.

மறைந்த செல்வசேகரனின் பூதவுடல் தற்சமயம் பொறளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு பொறளை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • Kumar Saturday, 29 December 2012 10:46 PM

  உப்பலி செல்வசேகரன் சிறந்த நகைச்சுவை நடிகர். இலங்கை தமிழ் சேவை இரண்டில் ஒலிபரப்பில் இவர் குரல் ஜனரஞ்சகத்தை பெற்றது மறக்க முடியாது.....

  Reply : 0       0

  Haniff Sunday, 30 December 2012 05:39 AM

  சிங்களம் பேசுபவர்கள் எப்படி தமிழ் கதைப்பார்களோ அப்படி நகைச்சுவையாக பேசி என் போன்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்தவர். இவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்திப்போமாக !

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .