2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

2012 முதல் இலத்திரனியல் அடையாள அட்டைகள்

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நபீலா ஹுசைன்)

உயிரியல் சார்ந்த தரவுகள் அடங்கிய போலியான தேசிய அடையாள அட்டைகளை உருவாக்கும் வாய்ப்புக்களை இல்லாது ஒழிப்பதற்காக புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது.
 
பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் கருப்பொருள் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட போதும் இது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என திணைக்களம் குறிப்பிட்டது.

தற்போதுள்ள அடையாள அட்டை நிச்சயமாக இலத்திரனியல் அட்டையாக மாற்றப்படும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஜகத் பி. விஜயவர்தன தெரிவித்தார்.

யுத்த காலத்தில் விடுதலை புலிகள் போன்ற பல இயக்கங்கள் இலகுவான முறையில் தற்போதுள்ள தேசிய அடையாள அட்டைகளை தயாரித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை அமுல்படுத்துவதன் மூலம் போலியான அடையாள அட்டை பாவனையை குறைக்கலாம் என ஆணையாளர் ஜகத் பி. விஜயவர்தன கூறினார்.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை நாட்டின் தேவை கருதி விரைவில் அரசு அமுல்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--