2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

2012ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படும்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 21 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் 65ஆவது வரவு, செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

7 ஆவது நாடாளுமன்றத்தின் இந்த 3  ஆவது வரவுசெலவுத்திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்.

2016 ஆம் ஆண்டிற்குள் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக்கும் இலக்குடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் வகையில் இந்த வரவுசெலவுத் திட்டம் அமைந்திருக்கும்.

இவ்வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நவம்பர் 22 ஆம் திகதியிலிருந்து 7 நாட்களுக்கு நடைபெறும். இரண்டாவது வாக்கெடுப்பு நவம்பர் 30 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

குழுநிலை விவாதங்கள் டிசெம்பர் 21 ஆம் திகதியிலிருந்து 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .