2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இந்தியாவில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு: ஐ.நா கவலை

Kanagaraj   / 2013 ஜனவரி 01 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், பாலியல் வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

இதேவேளை,பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கற்பழிப்பு ஆகியவற்றை தடுப்பதற்கு ஆதரவு அளிக்க தயார் என்று, இந்தியாவில் உள்ள ஐ.நா.சபை ஒருங்கிணைப்பாளர் லிசி கிராண்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் செயல்பட்டுவரும் ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம் டில்லியில் பாலியல் கொடுமையினால் பாதிக்கப்பட்டு மாணவி பலியான சம்பவத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த பாலியல் வன்முறைக்கு  உள்ளாகும் மூன்று பேரில் ஒருவர் குழந்தை என்றும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 7200 குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உள்ளாகி வருகின்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தின் பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .