2021 ஜனவரி 27, புதன்கிழமை

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு ஒத்துழைப்பதில்லை: நாராயணசாமி

Menaka Mookandi   / 2013 ஜனவரி 01 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கின்ற போதிலும் தமிழக அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை' என்று இந்திய மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
'தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை அரசு இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாராகவே உள்ளது.

ஆனால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு இரண்டு முறை கடிதம் எழுதியும், உரிய பதில் இல்லை.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசே காரணம்' என்று நாராயணசாமி மேலும் கூறியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .