2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஐ.தே.க. உறுப்பினர்கள் ஆஜராகமாட்டார்கள்: திஸ்ஸ

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் ரீட் மனு நாளை 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, ஐ.தே.க. உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார்கள் என அந்தக்  கட்சி இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

நாம் ஏன்? நாளை நீதிமன்றத்திற்கு போகமாட்டோம் என்பதற்கான விளக்கத்தை கொடுக்கும் அறிக்கை ஒன்றை ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுப்பார் என்று அந்தக்  கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'நாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயன்முறையை முழுமையாக எதிர்க்கின்றோம். ஆனால் நாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு நாளை போகமாட்டோம். இதற்கான காரணத்தை கட்சித் தலைவர் விளக்குவார்' எனவும் அவர் கூறினார்.  (யொஹான் பெரேரா,ஹபீல் பரிஸ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .