2021 ஜனவரி 20, புதன்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மாற்றுக் காணிகள்: அமைச்சர் அமரவீர

Menaka Mookandi   / 2013 ஜனவரி 04 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

ஜனாதிபதியின் ஆலோசனைப்படி வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 மாதங்களுக்குள் மாற்றுக் காணிகள் வழங்கப்படவுள்ளதாக அனர்த்த  முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் வெள்ளப்பெருக்கினால் சேதமாக்கப்பட்ட வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் தலா நூறு இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்குகள் ஏற்படும் போது சிறப்பாகச் செயற்படும் நோக்கில்; அனர்த்த முகாமைத்துவக் குழுக்களை மாவட்டம் தோரும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுக்கு ஒரு வேளைக்கு  அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் 90 ரூபா நிதியினை 150 ரூபாவாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .