2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

குழாயை ஒவ்வொரு நாளும் கண்காணிக்குமாறு சிபாரிசு

Kanagaraj   / 2013 ஜனவரி 05 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்திலிருந்து சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய்யை கடத்தும் குழாய்களை ஒவ்வொருநாளும் கண்காணித்தல் உள்ளிட் 39 சிபாரிசுகள் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அதில் 38 சிபாரிசுகள்  சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்ததாகும்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் அண்மையில் இடம்பெற்ற அனர்த்தம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூவரடங்கிய குழுவின் அறிக்கையிலேயே இந்த சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிபாரிசுகள் அனைத்தும் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற அனர்த்தத்தில் அங்கு பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .