2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

மக்கள் மனப்பாங்கில் மாற்றம் வேண்டும்: சட்டநிபுணர்கள்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 08 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஓலிந்தி ஜயசுந்தர

மக்களின் இலட்சியம், மனப்பாங்கு என்பவற்றில் மாற்றம் ஏற்படாதவிடத்து அரசியலமைப்புக்கான திருத்தம் எதுவும் சட்டத்தின் ஆட்சியை கொண்டுவராது என கல்வித்துறை சட்டநிபுணர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளரான அசோக சில்வா, மக்கள் தமது மனப்பாங்கை மாற்றவேண்டும் எனவும் முக்கிய தேசியப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மும்முரமாக உழைக்க வேண்டும்.

பல மக்களுக்கு தமது உரிமைகள் பற்றி எதுவும் தெரிவதில்லை. அரசியலைப்பை பலரால் விவாதித்து விளங்க முடிவதில்லை. இங்கு தான் பிரச்சினையுள்ளது.

முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. கொழும்புக்கு வெளியே இந்த பிரச்சினைப்பற்றி அக்கறை காட்டப்படவில்லை.

குற்றவியல் தண்டனை கோவை சட்டமூலம் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேள்ளப்படட்டது. இது ஆணையின்றி 48 மணிநேரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சந்தேக நபர் ஒருவரை விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸுக்கு வழங்கியது. இது உண்மையில் அரசியலமைப்பின் ஷரத்துகளுக்கு முரணானது. ஆனால் இது பெரியளவில் கவனிக்கப்படவில்லை என்றார்.

இதேவேளை, பத்திரிக்கையாளர் விக்டர் ஐவன் தெரிவிக்கையில்,

நாம் அரசியல்வாதிகளை குற்றம்சாட்டி நாம் பழகிவிட்டோம் மக்கள் அவர்களை வெறுக்கின்றனர். ஆனால் நாம் என்ன செய்துள்ளோம் என மீட்டுப்பார்த்து பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .