2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மருத்துவ கட்டணம் செலுத்தும்வரை மகள் தடுத்துவைக்கப்பட்டார்; தந்தை சாட்சியம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்மால் சூரியகொட
மனைவியின் மருத்துவ செலவை முழுமையாக செலுத்தி முடிக்கும்வரை, 13 வயது மகளை தனியார் வைத்தியசாலையொன்று தடுத்து வைத்திருந்ததாக தந்தையொருவர் நீதவானிடம் தெரிவித்துள்ளார்.

தும்மோதர பகுதியை சேர்ந்த கலகெதரகே உபாலி குணதிலக்க என்ற நபரே இவ்வாறு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.

இவரது மனைவி தயானி ஹேமமாலா தனியார் வைத்தியசாலை வைத்தியர்களின் கவனகுறைவு காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் உயிரிழந்துள்ளதாக இந்நபர் கொள்ளுப்பிட்டி  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உடல்நல குறைப்பாடு காரணமாக தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் வைத்தியசாலையின் கவனகுறைவு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் குறித்த தனியார் மருத்துவமனையிலிருந்து அரசாங்க வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மருத்துவ செலவாக ஒரு மில்லியன் ரூபாவை செலுத்துமாறும் தனியார் வைத்தியசாலை நிர்வாகம் மேற்படி நபரை பணித்துள்ளது.

இதேவேளை முழுமையான தொகையை செலுத்திமுடியும் வரை குறித்த பெண்ணின் 13 வயது மகளை வைத்தியசாலையின் அறையில் தடுத்து வைத்ததாகவும் அதன்பின் மைத்துனன் உறவு முறை உடைவர் அத்தொகையை செலுத்தியதாகவும் இந்நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X