2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள் விவகாரம்: இன்று விசாரணை

Kanagaraj   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஓலிந்தி ஜயசுந்தர

சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்களை பொறிக்கவேண்டும் எனும் கட்டளைக்கு எதிராக புகையிலை நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

புகையிலை கட்டுப்பாடு பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் சமவாயத்தின் உறுப்புரை 11 இல் விதிக்கப்பட்டதன் பிரகாரம் புகையிலை பாவனையின் பாதகங்களை சித்திரிக்கும் படங்களை பொறிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தும் வகையில் புகையிலை எதிர்ப்பாளர்கள் நூற்றுக்கணக்கானோர் விஹாரமகாதேவி பூங்கா அருகில் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்களை பொறிக்கவேண்டுமென கட்டளையிட்ட சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரமில்லை எனவும் அமைச்சர் இதை செயற்படுத்துவதை நீதிமன்றம் நிறுத்தவேண்டும் எனவும் கேட்டு இலங்கை புகையிலை நிறுவனம் ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்குத்தாக்கல் செய்திருந்தது.

அந்த வழக்கே இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .