2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்களை தடுக்க ஐ.தே.க முன்மொழிவுகள் தயாரிப்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 01 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யொஹான் பெரேரா

இந்த நாட்டில் பெண்கள் அதிகளவு பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்கும் கடும் சட்டங்கள் உட்பட பல முன்மொழிவுகளின் தொகுதியொன்றை ஐக்கிய தேசியக்கட்சி வெளியிடவுள்ளது.

சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 7 ஆம் திகதி இது வெளியிடபடவேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான லக்வனிதா இயகத்தைச்சேர்ந்த சாந்தனி கோங்ஹாகே தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்மொழிவுகளும் இதில் அடங்குவதாக அவர் கூறினார்.

இலங்கையில் தினமுத் 15 பெண்கள் வரையில் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர். 2012 ஆம் ஆண்டு 1636 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 48 சதவீதமானவை பெண்கள் இம்சை செய்தமை தொடர்பானவையாகும். இவற்றில் 89 சதவீதமானவை 16 வயதிலும் குறைந்த சிறுமிகளை பலாத்காரம் செய்தவையாகும்.
தற்போது 4000 முதிய பெண்களை பலாத்காரம் செய்த வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதாக பொலிஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--