2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

நாட்டு மக்கள் ஒன்றிணையும் காலம் ஏற்பட்டுள்ளது: ஜனாதிபதி

Kogilavani   / 2013 ஜூலை 21 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

'அனைத்து இனங்களுக்கும், மதங்களுக்கும் மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டிய காலம் உருவாகியுள்ளது' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

3970 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அம்பாறை, ரம்புக்கன் ஓயா நீர்த்தேக்கத்தின் திறப்பு விழா நிகழ்வு நேற்று சனிக்கிழமை அம்பாறை மகா ஓயா பொல்லேபெத்தையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு புதிய புத்துணர்வை ஊட்டுகின்றன.

அன்று 18ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்தியவாதிகள், மலைப் பிரதேசங்களில் வாழ்ந்த இந்த கிழக்கு பிரதேச மக்களை துன்புறுத்தினர். அதாவது 14 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளை கொன்று குவித்தனர். அவர்களின் ஏகாதிபத்தியற்கு பயந்துதான் அந்த பிரதேசத்திலிருந்து இந்த பிரதேசத்திற்கு இம்மக்கள் குடிபெயந்தனர்.

எம்மக்களின் பசுமைப்புரட்சியை  இல்லாதொழித்த அன்றைய ஏகாதிபத்தியவாதிகள் வாவி மற்றும் குளங்களை அழித்து இந்நாட்டில் பட்டினிச்சாவை ஏற்படுத்தினர்.

1970 ஆம் ஆண்டில் இந்நாட்டின் அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் மற்றும் மைத்திரிபால சேனநாயக்க போன்றோர் இந்த நாட்டில் அபிவிருத்திக்காக வித்திட்டனர்.

அந்தவேளையிலேதான் இந்த ரம்புக்கன் ஓயா அபிவிருத்தித் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர். அப்படியே நின்று போன இத்திட்டம் பல வருடங்களின் பின்னர் இன்றுதான் பூர்த்தியாகியுள்ளது.

பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுவிக்கப்பட்டதனைப் போன்று வரட்சி மற்றும் பட்டினியிலிருந்தும் நாட்டின் சந்ததி விடுவிக்கப்பட்டு தன்னிறைவு மிக்க நாடாக கட்டியெழுப்பப்படும்.

குருநாகல் தெதுறு ஓயா, மாத்தளை மொறஹாகந்த மற்றும் அம்பாறை ரம்புக்கன் ஓயா இவையாவும் இந்த மஹிந்த சிந்தனையின் கீழ் அடங்குகின்றன. மஹிந்த சிந்தனையின் மூலமாக இந்த நாடு படிப்படியாக அபிவிருத்தியின்பால் தன்னிறைவுயடைகின்றது.

நீர்வளம் நமது நாட்டின் முக்கிய வளங்களில் ஒன்றாகும். அந்த உன்னதமான வளங்களின் உரிமை நம்நாட்டு மக்கள் வசம் இருக்க வேண்டும்.

எனவே எல்லோருக்கும் மதிப்பளித்து இன, மத போதமின்றி மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டினைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்' என்றார்.

  Comments - 0

 • neethan Sunday, 21 July 2013 11:53 AM

  படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்பது ஜனாதிபதியின் பேச்சுக்கு பொருத்தமானது...!!!

  Reply : 0       0

  Faizal Sunday, 21 July 2013 04:56 PM

  இப்படி எல்லாம் உங்களால எப்படி........???!!!

  Reply : 0       0

  Faizal Sunday, 21 July 2013 04:59 PM

  மஹியங்கனை பள்ளிவாசல் பிரச்சினை தெரியாது போல‌...!!!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--