2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வத்தளை பிரதேச சபைத்தலைவரின் வீட்டு உதவியாளர் கொலை

Kanagaraj   / 2013 ஜூலை 22 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை பிரதேச சபையின் தலைவர் ரத்ன அல்விஸின் வீட்டில் கடமையாற்றிய 75 வயதான ஜயமன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பிரதேச சபையின் தலைவர் ரத்ன அல்விஸின் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக நேற்றிரவு வந்த குழுவினரே அவரை கொலைச்செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச சபைத்தலைவர் வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவரது மனைவியுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டு உதவியாளர்; அயல் வீட்டாரிடம் தேநீர் தரும்படி கேட்டுள்ளார்.

எனினும், அவர்கள் தேநீர் தயாரித்து எடுத்து வந்து பார்க்கும்போது அந்நபரை காணவில்லை. எனினும், நகரசபைத் தலைவரது வீட்டினுள் ஒருவர் இருப்பதை அவதானித்த அயல் வீட்டார் நகரசபைத் தலைவருக்கு தொலைபேசியூடாக தெரிவித்துள்ளனர்.

வீட்டிற்கு திரும்பிய நகரசபைத் தலைவர் தனது வீட்டு உதவியாளரை தேடியபோது அவர் குளியல் அறையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X