2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

வடமேல் தேர்தலில் ரங்கே எம்.பி தனிக்குழு

Kanagaraj   / 2013 ஜூலை 22 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமேல் மாகாண சபைத்தேர்தலில், ஐக்கிய தேசியக்கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின பாலித்த ரங்கேபண்டார தனியான குழுவொன்றை களமிறக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

அவருடன் ஐக்கிய தேசியக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான அசோக அபேசிங்கவும் இணைந்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுடைய குழுவில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகாவை முதன்மை வேட்பாளராக களமிறக்குவதற்கு முயன்றதாகவும் அதற்கு பொன்சேகா மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இன்றுக்காலை நாடுதிரும்பிய அவர், தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவிருப்பதாக கட்சி அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவிடம் நான் மன்னிப்பு கோரவேண்டியதில்லை என்றும் கட்சியை சின்னாபின்னமாக ஆக்கியதையிட்டு அவரே கட்சி ஆதரவாளர்களிடம் மன்னிப்பு கோரவேண்டுமென்றும் தெரிவித்த அவர், ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் கடிதமெதனையும் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • AMBI Monday, 22 July 2013 11:13 AM

    நீங்களும் ஒரு கட்சி ஆரம்பித்து அதற்கு ஒரு பெயரும் வைக்க வேண்டாமா? இப்போது நாட்டில் ஓர் அமைச்சர், ஒரு தலைவர், ஒரு கட்சி அப்படித்தான் இருக்க வேணும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X