2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தயாசிறி ஜயசேகர வாபஸ் பெற்றார்

Kanagaraj   / 2013 ஜூலை 25 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக கையளித்திருந்த இரண்டு கேள்விகளையும் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றை ஒழுங்குப்பத்திரத்திற்காக சமர்ப்பித்திருந்த இரண்டு கேள்விகளையுமே அவர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் நாளொன்றுக்கு 15 வாய்மூல விடைக்கான வினாக்கள் உள்ளடக்கப்படவேண்டும் .

இந்நிலையில், இன்றைய (நேற்றைய) ஒழுங்குப்பத்திரத்தில் 13 கேள்விகள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளன. இது எப்படி நடந்தது என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க எம்.பி கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்றைய (நேற்றைய) ஒழுங்குப்பத்திரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த இரண்டு கேள்விகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்துக்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • மனிதன் Friday, 26 July 2013 10:53 AM

    ரணிலின் சுயநலத்தால், பலம்மிக்க எதிர்க்கட்சி இல்லை. இதனால் அரசு, தன் சுகபோகத்துக்காக இலங்கையின் பல வளங்களை அந்நியரிடம் அடகு வைத்துள்ளது. பற்றாக்குறைக்கு விலைவாசியையும் அதிகரிக்கிறது. இதிலிருந்து பெரும்பான்மை மக்களின் கவனத்தை திசை திருப்பத்தான் இந்த "பொது பல சேன" "இராவண" மதவெறி தூண்டல் முயற்சி. உண்மையான அபிவிருத்தியை இலங்கையில் ஏற்படுத்த இந்த அரசு தயாராக இல்லை. ரணிலை நம்பினால் இன்னும் பல வருடங்களுக்கு ஏமாற வேண்டியது தான் என்று, பிழைப்பை தேடி போய்க் கொண்டிருக்கிறார்கள் பா.ம. உறுப்பினர்கள்.

    என்று தான் இந்நிலை மாறுமோ... இறைவா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X